Published : 22 Aug 2022 08:09 PM
Last Updated : 22 Aug 2022 08:09 PM
அருண் விஜய் நடிக்கும் 'சினம்' திரைப்படம் வரும் செப்டம்பர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகார்ப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் திரைப்படம் 'சினம்'. இந்தப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக பாலக் லால்வனி நடித்துள்ளார். தவிர, காளிவெங்கட் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். அருண் விஜய்யின் அப்பா விஜய்குமார் தயாரித்துள்ள இப்படதிற்கு ஷபிர் இசையமைத்துள்ளார்.
கதை, திரைக்கதை ஆர்.சரவணன் எழுதியுள்ளார். இப்படத்தில் அருண் விஜய் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். படத்தின் டீசர் மட்டுமே வெளியான நிலையில் படத்தின் டிரைலர் விரைவில் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், படம் வரும் வரும் செப்டம்பர் 16-ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 'யானை', 'தமிழ்ராக்கர்ஸ்' இணையத்தொடரை அடுத்து அருண்விஜய் நடிக்கும் 'சினம்' திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
Here it is!! A story that needs to be told!!
— ArunVijay (@arunvijayno1) August 22, 2022
#Sinam releasing worldwide on Sept 16th.
#SinamfromSept16 @MSPLProductions @gnrkumaravelan #Vijaykumar #PallakLalwani @kaaliactor @gopinath_dop @shabirmusic @madhankarky @silvastunt @DoneChannel1 @Muzik247in @CtcMediaboy pic.twitter.com/X3JwhU21za
Sign up to receive our newsletter in your inbox every day!