Last Updated : 25 Oct, 2016 06:12 PM

 

Published : 25 Oct 2016 06:12 PM
Last Updated : 25 Oct 2016 06:12 PM

கவண் மூலம் திரைப்பாடகி ஆகிறார் மடோனா செபஸ்டியன்

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் உருவாகும் 'கவண்' படத்தின் மூலம் பாடகியாகவும் அறிமுகமாக இருக்கிறார் மடோனா செபாஸ்டியன்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி, மடோனா செபாஸ்டியன், டி.ராஜேந்தர் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. தொடர்ச்சியாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது.

அபிநந்தன் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு 'ஹிப் ஹாப்' தமிழா இசையமைத்து வருகிறார். நவம்பரில் இசை வெளியீடு, டிசம்பரில் படத்தையும் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

சமீபத்தில் இப்படத்துக்கு 'கவண்' என தலைப்பிட்டு இருக்கிறது படக்குழு. மேலும், தற்போது இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் பாடல் ஒன்றை படமாக்கி வருகிறார்கள். அப்பாடலை இப்படத்தின் நாயகி மடோனா செபாஸ்டியன் மற்றும் டி.ராஜேந்தர் இணைந்து பாடியிருக்கிறார்கள்.

'கவண்' படத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இடம்பெறுவது போன்று இப்பாடலை வடிவமைத்திருக்கிறார் கே.வி.ஆனந்த். தற்போது தொடங்கப்பட்டுள்ள இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நவம்பர் 3ம் தேதி அன்று மொத்த படப்பிடிப்பும் முடிவு பெறுகிறது. அதனைத் தொடர்ந்து இறுதிகட்ட பணிகளைத் துரிதப்படுத்த இருக்கிறது படக்குழு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x