

'ஜெயிலர்' படத்தில் நடிகை தமன்னா, ரஜினியுடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் படம் 'ஜெயிலர்'. ரஜினியின் 169-வது படமாக உருவாகும் இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார். இதில், கன்னட நடிகர் சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்தப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகின. ஆனால், ஐஸ்வர்யா ராய் மற்ற படங்களில் பிஸியாக இருப்பதால் 'ஜெயிலர்' படத்திற்கு தேதி ஒதுக்க முடியவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவருக்கு பதிலாக தமன்னாவை நடிக்க வைக்க படக்குழு முடிவெடுத்துள்ளது.
இது தொடர்பாக நடிகை தமன்னா ஒப்பந்தம் செய்யபட்டுள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பின் ஆகஸ்ட் 15 அல்லது 22-ம் தேதி தொடங்கும் என்று நடிகர் ரஜினிகாந்த் சமீபத்தில் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.