Last Updated : 30 Sep, 2016 06:25 PM

 

Published : 30 Sep 2016 06:25 PM
Last Updated : 30 Sep 2016 06:25 PM

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் மகன் அறிமுகம்

'த்ரிஷ்யம்' இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லாலின் மகன் பிரனவ் நாயகனாக அறிமுகமாக இருக்கிறார்.

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால், மீனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'த்ரிஷ்யம்'. மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படம் தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் ரீமேக் செய்து வரவேற்பு பெற்றது.

ஜீத்து ஜோசப்பிடம் மோகன்லாலின் மகன் பிரவன் உதவி இயக்குநராக 'லைஃப் ஆப் ஜோசுகுட்டி' மற்றும் 'பாபநாசம்' உள்ளிட்ட படங்களில் பணியாற்றியுள்ளார்.

தற்போது ஜீத்து ஜோசப்பின் இயக்கத்தில் பிரனவ் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். இதனை மோகன்லால் தனது சமூக வலைதள பக்கங்களில் உறுதிப்படுத்தி இருக்கிறார். த்ரில்லர் பாணியில் இப்படம் உருவாக இருக்கிறது.

இப்படத்தை 'த்ரிஷ்யம்' படத்தை தயாரித்த ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x