தனுஷின் ‘வாத்தி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது; பிறந்த நாள் ஸ்பெஷலாக நாளை டீசர் ரிலீஸ்

தனுஷின் ‘வாத்தி’ ஃபர்ஸ்ட் லுக் வெளியானது; பிறந்த நாள் ஸ்பெஷலாக நாளை டீசர் ரிலீஸ்
Updated on
2 min read

நடிகர் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு ‘வாத்தி’ படத்தின் டீசர் நாளை வெளியாக உள்ளது. தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

நடிகர் தனுஷ் தெலுங்கில் முதல்முறையாக நடித்துவரும் 'சார்' என்கிற திரைப்படம் தமிழில் 'வாத்தி' என்கிற பெயரில் இருமொழி படமாக உருவாகி வருகிறது.

கிட்டத்தட்ட இறுதிகட்டத்தை எட்டியுள்ள இந்தப் படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் சார்பில் நாகவம்சி மற்றும் சாய் சவுஜன்யா ஆகியோர் தயாரித்து வருகின்றனர்.

ஸ்ரீகலா ஸ்டுடியோஸ் வெளியிடும் இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார். இந்தப் படத்தில் சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்கிறார்.

சமுத்திரக்கனி, தோட்டப்பள்ளி மது, நர ஸ்ரீனிவாஸ், பம்மி சாய், ஹைப்பர் ஆதி, ஷாரா, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன், ஹரீஷ் பெராடி, பிரவீணா மற்றும் பலர் நடிக்கின்றனர். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

ஒரு சாதாரண மனிதனின் லட்சிய பயணத்தை அறிவிக்கும் விதமாக இந்தப் படத்தின் டைட்டில் குறித்து இரு மொழிகளிலும் வெளியிடப்பட்ட வீடியோ, பலரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த நிலையில், தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு சார் / வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர்.

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சுற்றிலும் உள்ள அலமாரிகளில் புத்தகங்களாக அடுக்கப்பட்டிருக்க, மேசையின் மீது எரிந்துகொண்டிருக்கும் இரவு விளக்கின் வெளிச்சத்தில் தனுஷ் அமர்ந்து மும்முரமாக ஏதோ முக்கியமான அசைன்மென்ட் ஒன்றில் வேலை பார்த்துக் கொண்டிருப்பது போல உருவாக்கப்பட்டுள்ளது.

ஒரு விரிவுரையாளராக தனுஷ் நடிக்கும் வாத்தி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை பார்க்கும்போது படத்தின் மீதான ஆர்வத்தை இன்னும் அதிகப்படுத்துவதாகவும் இருக்கிறது. இந்த படத்தின் டீசர் தனுஷின் பிறந்தநாளான நாளை (ஜூலை 28) மாலை 6 மணிக்கு வெளியாக இருக்கிறது.

இதுபற்றி படத்தின் இயக்குனர் வெங்கி அட்லூரி கூறும்போது, ''இந்தப் படத்தில் தனுஷ் ஒரு விரிவுரையாதராக நடிக்கிறார். தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் தயாராகும் இந்தப் படம் கல்வி அமைப்பை மையப்படுத்தி உருவாகி உள்ளது.

இந்தப் படத்தின் படப்பிடிப்பில் தனுஷின் உழைப்பும் அர்ப்பணிப்பும் உண்மையிலேயே நம்பமுடியாத ஒன்று. ஜி.வி பிரகாஷின் இசை யுவராஜின் ஒளிப்பதிவு இரண்டுமே இந்த படத்தின் மிக முக்கியமான அம்சங்களாக அமையும்” என்கிறார். சார் படம் வரும் அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in