Last Updated : 29 Sep, 2016 12:21 PM

 

Published : 29 Sep 2016 12:21 PM
Last Updated : 29 Sep 2016 12:21 PM

ஜி.வி.பிரகாஷ் உடன் இணையும் வடிவேலு

ராம்பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவிருக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலும் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் 'ப்ரூஸ்லீ' மற்றும் 'கடவுள் இருக்கான் குமாரு' ஆகிய படங்களின் இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கும் படம், சசி இயக்கும் படம், 'அடங்காதே' உள்ளிட்ட படங்களில் நடிக்கவிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ்.

இப்படங்களைத் தொடர்ந்து ராம்பாலா இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பரில் துவங்க படக்குழு திட்டமிட்டு இருக்கிறது. இப்படத்தை ஸ்டீபன் தயாரிக்கவிருக்கிறார்.

இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். தற்போது நாயகனாக மட்டுமன்றி பல்வேறு படங்களில் காமெடியனாகவும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார் வடிவேலு.

முழுக்க காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் மற்றும் வடிவேலும் ஆகியோருடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x