ஆக்‌ஷனில் மிரட்டும் விஷால்: வெளியானது ‘லத்தி’ திரைப்படத்தின் டீசர்

ஆக்‌ஷனில் மிரட்டும் விஷால்: வெளியானது ‘லத்தி’ திரைப்படத்தின் டீசர்
Updated on
1 min read

சென்னை: நடிகர் விஷால் நடிப்பில் உருவாகி உள்ள ‘லத்தி’ திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. ஒற்றையாக திரியும் காட்டு யானையை போல சமூக விரோதிகளை தனி ஒருவராக லத்தியை மட்டுமே வைத்துக் கொண்டு வேட்டையாடுகிறார் காவலர் விஷால் என இந்த டீசரை பார்ப்பதன் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

ராணா புராடக்‌ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா - நந்தா இணைந்து தயாரித்துள்ள திரைப்படம்தான் லத்தி. இந்த படத்தை இயக்குநர் வினோத்குமார் எழுதி, இயக்கியுள்ளார். படத்திற்கான இசையை யுவன்ஷங்கர் ராஜா அமைத்துள்ளார். ஒளிப்பதிவு பணியை பாலசுப்ரமணியம் மற்றும் பாலகிருஷ்ணா தோட்டா ஆகியோர் கவனித்துள்ளனர்.

சண்டை அமைப்பு பணிகளை பீட்டர் ஹெயின் கவனித்துள்ளார். நடிகை சுனைனா நடித்துள்ளார். விஷால் ‘முருகானந்தம்’ என்ற கதாபாத்திரத்தில் காவலராக நடித்துள்ளார். வழக்கமாக கதாநாயகர்கள் போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கும் போது இன்ஸ்பெக்டர், கமிஷனர், டிஜிபி போன்ற அதிகாரிகளாக தான் நடிப்பார்கள். ஆனால் விஷால் போலீஸ் கான்ஸ்டபிளாக இந்த படத்தில் நடித்து கவனம் ஈர்க்கிறார்.

சுமார் 1.38 நிமிடங்கள் ஓடும் இந்த டீசர் முழுவதும் ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்துள்ளன. இந்த படத்தில் 8 வயது பிள்ளைக்கு அப்பாவாக விஷால் நடித்துள்ளதாக தயாரிப்பாளர்கள் தெரிவித்துள்ளதாக தகவல். வெகு விரைவில் இந்த படம் திரைக்கு வரும் என தெரிகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in