மாநிலங்களவை எம்.பி.யாக நாளை பதவியேற்கிறார் இளையராஜா

மாநிலங்களவை எம்.பி.யாக நாளை பதவியேற்கிறார் இளையராஜா

Published on

இசையமைப்பாளர் இளையராஜா நாளை மாநிலங்களவை உறுப்பினராக பதவி ஏற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

அந்தந்த துறைகளில் சிறந்த விளங்குபவர்கள் குடியரசுத் தலைவரால் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர். அந்த வகையில், இசையமைப்பாளர் இளையராஜா, தடகள வீராங்கனை பி.டி.உஷா, திரைக்கதை எழுத்தாளர் வி.விஜயேந்திர பிரசாத், வீரேந்திர ஹெக்டே ஆகியோர் மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துகளை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அண்மையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது மாநிலங்களவை நியமன உறுப்பினர்கள் ஒவ்வொருவராக பதவி ஏற்க அழைக்கப்பட்டனர். அப்போது, மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு இளையராஜா என அழைத்ததும், அனைவரும் கைத்தட்டினர்.

ஆனால், இளையராஜா இசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்ததால் அவரால் பதவி ஏற்பு விழாவில் கலந்துகொள்ள முடியவில்லை. இதனிடையே கடந்த 19-ம் தேதி சென்னை திரும்பினார் இளையராஜா. இந்நிலையில், நாளை மாநிலங்களவை எம்.பியாக இளையராஜா பதவி ஏற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in