Published : 11 Jul 2022 08:29 PM
Last Updated : 11 Jul 2022 08:29 PM
சென்னை: நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் பாலா காம்போவில் உருவாகி வரும் படத்தின் டைட்டில் லுக் வெளியாகி உள்ளது. இயக்குநர் பாலாவின் பிறந்தநாளை முன்னிட்டு இதனை வெளியிட்டுள்ளது படத் தயாரிப்புக் குழு.
தமிழ் சினிமாவின் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. தற்போது இயக்குநர் பாலா இயக்கத்தில் உருவாகி வரும் 'வணங்கான்' படத்தில் நடித்து வருகிறார். அதோடு சூரைப் போற்று இந்தி மொழி ரீமேக்கிலும் நடித்து வருகிறார். அண்மையில் வெளியான விக்ரம் படத்தில் ரோலக்ஸ் கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் நெஞ்சை கவர்ந்திருந்தார். இயக்குநர் வெற்றிமாறனுடன் ஒரு திரைப்படத்தில் இணைகிறார்.
சூர்யா மற்றும் பாலா இணைந்து பணியாற்றி வரும் இந்த படத்தை சூர்யா - ஜோதிகா தம்பதியர் 2டி என்டர்டெயின்மென்ட் பேனரில் தயாரித்து வருகின்றனர். இந்தப் படத்தின் முதற்கட்ட ஷூட்டிங்கின்போது பாலா மற்றும் சூர்யாவுக்கு இடையே கருத்து முரண் ஏற்பட்டதாகவும், அதனால் படம் மேற்கொண்டு தொடருமா என்பது சந்தேகம் தான் எனவும் சொல்லப்பட்டது.
இந்நிலையில், சூர்யா அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். இன்று (ஜூலை 11) இயக்குநர் பாலாவின் பிறந்தநாள். அதை முன்னிட்டு இந்தப் படத்தின் டைட்டில் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. இந்தப் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைக்கிறார், கீர்த்தி ஷெட்டி இதில் நடிக்கிறார்.
"உங்களுடன் மீண்டும் இணைந்ததில் பெருமகிழ்ச்சி..! பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா…!" என சூர்யா இந்த படத்தின் போஸ்டருடன் ட்வீட் செய்துள்ளார்.
#வணங்கான் #Vanangaan #Achaludu #Suriya41 #Suriya41TitleLook@Suriya_offl #Jyotika #DirBala @gvprakash @IamKrithiShetty @rajsekarpandian #MamithaBaiju @editorsuriya #Mayapandi @kabilanchelliah @manojdass07 @proyuvraaj pic.twitter.com/pSXJV9F2cT
Sign up to receive our newsletter in your inbox every day!