Last Updated : 11 May, 2016 12:07 PM

 

Published : 11 May 2016 12:07 PM
Last Updated : 11 May 2016 12:07 PM

ஜூலை முதல் வாரத்தில் கபாலி வெளியாக வாய்ப்பு

ஜூலை 1ம் தேதி அல்லது 7ம் தேதி 'கபாலி' படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி, ராதிகா ஆப்தே, கலையரசன், தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'கபாலி'. தாணு தயாரித்திருக்கும் இப்படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

சமீபத்தில் இணையத்தில் வெளியிடப்பட்ட 'கபாலி' டீஸருக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது மட்டுமன்றி பல்வேறு சாதனைகளையும் அது நிகழ்த்தியுள்ளது.

'கபாலி' டீஸர் வெளியீட்டைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டு தேதி குறித்த பேச்சுவார்த்தை தொடங்கப்பட்டுள்ளது. படத்தை ஜூலை 1ம் தேதி வெளியிடலாம் என்று திட்டமிட்டு இருக்கிறார் தயாரிப்பாளர் தாணு.

ஆனால், மலேசியா மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள விநியோகஸ்தர்கள், ரம்ஜான் நோன்பு காலம் என்பதால் ஜூலை 7ம் தேதி ரம்ஜானுக்கு வெளியிடுங்கள் என்று தாணுவிடம் கேட்டிருக்கிறார்கள்.

மே இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் 'கபாலி' படத்தின் இசையை வெளியிட இருக்கிறார்கள். அதனைத் தொடர்ந்து படத்தின் வெளியீட்டு தேதி இறுதி செய்யப்படும் என்கிறது படக்குழு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x