சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக போட்டி? - நடிகர் விஷால் கொடுத்த விளக்கம்

சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக போட்டி? - நடிகர் விஷால் கொடுத்த விளக்கம்
Updated on
1 min read

ஆந்திர அரசியலில் இறங்கப்போவதாக வெளியான தகவலை நடிகர் விஷால் மறுத்துள்ளார்.

நடிகர் விஷால் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில், "ஆந்திர அரசியலில் நான் இறங்கப்போவதாகவும், குப்பம் தொகுதியில் போட்டியிட போவதாகவும் சில வதந்திகள் பரவுவதை கேள்விப்பட்டேன். முற்றிலுமாக இந்த தகவலை மறுக்குகிறேன். இந்த வதந்தி தொடர்பாக நான் அறிந்திருக்கவில்லை. மேலும், இதுதொடர்பாக என்னை யாரும் அணுகவில்லை. இது எங்கிருந்து எப்படி பரவியது என்பது தெரியவில்லை. எனக்கு இப்போதைக்கு சினிமா தான் அனைத்தும். ஆந்திர அரசியலில் நுழைய வேண்டும் என்றோ, சந்திரபாபு நாயுடுவுக்கு எதிராக போட்டியிட வேண்டும் என்றோ எனக்கு எந்த உள்நோக்கமும் இல்லை" என்று தெரிவித்திருந்தார்.

பின்னணி என்ன?

விஷாலின் இந்த விளக்கத்துக்கு காரணம், சமீபத்தில் பரவிய தகவல்கள் தான். ஆந்திராவில் இருதுருவங்களாக உள்ளனர் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியும், எதிர்க்கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடுவும். குப்பம் தொகுதி சந்திரபாபு நாயுடுவின் சொந்த தொகுதி. இங்கு அவரை தோற்கடிக்க ஜெகன் மோகன் ரெட்டி நடிகர் விஷாலிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஆந்திர ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

தமிழகத்தின் எல்லைப் பகுதியான குப்பம் தொகுதியில் தமிழர்கள் நிறைய வசிப்பதால், அவர்கள் வாக்குகளை குறிவைக்கும் விதமாக, தமிழக மக்களுக்கு மிகவும் அறிந்த முகமான அதே வேளையில் ஆந்திர மக்களுக்கும் தெரிந்த முகமான விஷாலை ஜெகன் தேர்வு செய்ததாகவும் அந்த செய்திகளில் சொல்லப்பட்டது. இந்த தகவலை தான் திட்டவட்டமாக நடிகர் விஷால் மறுத்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in