Last Updated : 12 May, 2016 04:19 PM

 

Published : 12 May 2016 04:19 PM
Last Updated : 12 May 2016 04:19 PM

அறிவழகன் - அருண் விஜய் இணையும் குற்றம் 23

அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்துவரும் படத்துக்கு 'குற்றம் 23' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

'ஆறாது சினம்' படத்தைத் தொடர்ந்து அருண் விஜய் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார் அறிவழகன். இது மருத்துவம் கலந்த த்ரில்லர் கதை. இப்படத்தின் மூலமாக தயாரிப்பாளராகவும் அறிமுகமாக இருக்கிறார் அருண்விஜய்.

இசையமைப்பாளராக விஷால் சந்திரசேகர், கலை இயக்குநராக ஷக்தி, ஒளிப்பதிவாளராக பாஸ்கரன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டார்கள். இப்படத்தின் தலைப்பு இறுதி செய்யாமலே படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கப்பட்டது. சுமார் 36 மணி நேரம் இடைவிடாது சில முக்கியமான காட்சிகளை படமாக்கினார்கள். இப்படத்தின் தலைப்பை இயக்குநர் வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பார் என்று படக்குழு அறிவித்தது.

அதன்படி, இன்று 'குற்றம் 23' என்பது தான் தலைப்பு என இயக்குநர் வெங்கட்பிரபு பர்ஸ்ட் லுக் போஸ்ட் உடன் அறிவித்தார். அருண்விஜய் நடிக்கும் 23வது படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x