Published : 21 Jun 2022 06:54 PM
Last Updated : 21 Jun 2022 06:54 PM

பாலியல் வன்கொடுமை புகார்: ஆஸ்கர் விருது வென்ற ஹாலிவுட் இயக்குநர் பால் ஹக்கிஸ் கைது

இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆஸ்கர் விருது பெற்ற இயக்குநர் பால் ஹக்கிஸ், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கனடாவைச் சேர்ந்த பிரபல ஹாலிவுட் திரைப்பட இயக்குநர் பால் ஹக்கிஸ். 69 வயதாகும் இவர், 'நெக்ஸ்ட் த்ரீ டேஸ்', 'தேர்ட் பெர்சன்' உள்ளிட்ட 7 படங்களை இயக்கியுள்ளார். இதில், 'கிராஷ்' படத்தில் சிறப்பான திரைக்கதை அமைத்ததற்காக கடந்த 2006 ஆம் ஆண்டு இவருக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டது. சிறந்த திரைக்கதையாளர் மற்றும் சிறந்த தயாரிப்பாளர் பிரிவில் 2 ஆஸ்கர் விருதுகளைப் பெற்றார் பால் ஹக்கிஸ்.

இந்நிலையில், இத்தாலியில் நடைபெறும் திரைப்பட விழாவில் கலந்துகொள்வதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் அவர் அங்கு சென்றார். இவர் புக்லியா என்ற சுற்றுலா நகரத்தில் உள்ள ஒஸ்துனியில் தங்கி இருந்தார். அங்கு இளம்பெண் ஒருவரை அவர் கட்டாயப்படுத்தி இரண்டு நாட்களாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக அவர் மீது குற்றம்சாட்டபட்டது.

இதனைத் தொடர்ந்து, அவர் மீது வழக்குப் பதிவு செய்த இத்தாலி காவல்துறையினர், அவரைக் கைது செய்து வீட்டுக்காவலில் வைத்துள்ளனர்.

வழக்கு விசாரணை வருகிற வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து இத்தாலி போலீஸார் விசாரனை நடத்தி வருகின்றனர். ஆனால், 'இந்தக் குற்றச்சாட்டில் உண்மையில்லை' என்று பால் ஹக்கிஸ் மறுத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x