Published : 21 Jun 2022 05:04 PM
Last Updated : 21 Jun 2022 05:04 PM
'ஒரு பெண்ணைப் பற்றிய வதந்தி என்றால் உண்மை என நம்புகின்றனர். அதுவே ஆணைப் பற்றி வதந்தி வந்தால், அதை பெண்தான் பரப்புகிறார் என்று கூறுவது'' என நடிகை சமந்தா ட்விட்டரில் எதிர்வினையாற்றியுள்ளார்.
கடந்த 2017-ம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார் நடிகை சமந்தா. திருமணத்திற்கு பிறகு இருவரும் படங்களில் நடித்துக் கொண்டிருந்தனர். திடீரென்று கடந்தாண்டு இருவரும் விவாகரத்து செய்துவதாக அறிவித்து, தங்கள் மண வாழ்க்கையை முடித்துக்கொண்டனர்.
இதனையடுத்து நாக சைதன்யா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக தகவல் பரவியது. அவர் நடிகை ஷோபிதா துலிபாவை காதலித்து வருவதாகவும், இருவரும் திருமணம் செய்து கொள்ளபோவதாகவும் கூறபட்டடது. இந்தியில் நடித்து வரும் நடிகை ஷோபிதா துலிபா, தமிழில் 'பொன்னின் செல்வன்' படத்தில் நடித்துள்ளார்.
இப்படியான வதந்திகளுக்கு சமந்தாவின் பிஆர் குழு தான் காரணம். அவர்கள் தான் இப்படியான தகவல்களை பரப்பி வருவதாக ரசிகர்கள் சிலர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இதனால் கடுப்பான சமந்தா, இது தொடர்பாக பதிவிட்டவரை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், 'ஒரு பெண்ணைப் பற்றிய வதந்தி என்றால் உண்மை என நம்புகின்றனர். அதுவே ஆணைப் பற்றி வதந்தி வந்தால், அதை பெண்தான் பரப்புகிறார் என்று கூறுகிறீர்கள். முதிர்ச்சியுடன் நடந்துகொள்ளுங்கள். இந்த விஷயத்தில் சமந்தப்பட்டவர்கள் இருவரும் பிரிந்து சென்று அடுத்த வேலைகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். நீங்களும் அதிலிருந்து நகர்ந்து, உங்கள் வேலை, குடும்பத்தின் மீது கவனம் செலுத்துங்கள்'' என பதிவிட்டுள்ளார்.
Rumours on girl - Must be true !!
— Samantha (@Samanthaprabhu2) June 21, 2022
Rumours on boy - Planted by girl !!
Grow up guys ..
Parties involved have clearly moved on .. you should move on too !! Concentrate on your work … on your families .. move on!! https://t.co/6dbj3S5TJ6
Sign up to receive our newsletter in your inbox every day!