Published : 20 Jun 2022 02:24 PM
Last Updated : 20 Jun 2022 02:24 PM

தீபாவளி ரேஸில் அஜித், கார்த்தியுடன் இணையும் ஜெயம் ரவி?

'ஜெயம்' ரவி நடிக்கும் 'இறைவன்' திரைப்படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம், ஜெயம்ரவியின் படம், அஜித்தின் 'ஏகே61', கார்ரித்தியின் 'சர்தார்' படத்துடன் மோதும் எனத் தெரிகிறது.

'ஜெயம்' ரவி நடித்துள்ள 'அகிலன்' திரைப்படம் வரும் செப்டம்பர் 15-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதைத் தொடர்ந்து 'ஜெயம்' ரவி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள 'பொன்னின் செல்வன்' திரைப்படம் செப்டம்பர் 30-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், 'வாமனன்', 'என்றென்றும் புன்னகை', 'மனிதன்', படங்களை இயக்கிய இயக்குநர் அஹமதுடன் கைகோத்திருக்கிறார் ஜெயம்ரவி. 'இறைவன்' என பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைப்பெற்று வரும் நிலையில், படத்தை தீபாவளிக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்து வருகிறார். யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் பட்சத்தில், கார்த்தியின் 'சர்தார்', அஜித்தின் 'ஏகே61' படங்களுடன் ஜெயம் ரவியின் 'இறைவன்' படமும் மோதும் எனத் தெரிகிறது. பெரிய நடிகர்களின் படங்கள் வரிசைக்கட்டியிருப்பதால் தீபாவளியை திரைப்படங்களுடன் கொண்டாட ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x