Published : 13 Jun 2022 05:50 PM
Last Updated : 13 Jun 2022 05:50 PM
கமலின் 'விக்ரம்' படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இந்த வாரம் வெளியாக இருந்த 'யானை' திரைப்படம் ஜூலை 1-ம் தேதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ஹரியுடன் முதல் முறையாக அருண் விஜய் நடிக்கும் திரைப்படம் 'யானை'. அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். இவர்களுடன் பிரகாஷ் ராஜ், அம்மு அபிராமி, ராதிகா சரத்குமார், யோகி பாபு, போஸ் வெங்கட், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆண்டனி படத்தொகுப்பு பணியை மேற்கொண்டுள்ளார். ஹரியின் வழக்கமான ஸ்டைலில், குடும்ப ஆக்ஷன் பாணியில் இப்படம் உருவாகியுள்ளதை அண்மையில் வெளியான இப்படத்தின் ட்ரெய்லர் உறுதி செய்தது.
இந்நிலையில், 'யானை' திரைப்படம் இந்த வாரம் ஜூன் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, 'யானை' திரைப்படம் வரும் ஜூலை 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
'விக்ரம்' திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையிலும், ஜூன் 17-ம் தேதி ஆர்.ஜே.பாலாஜியின் 'வீட்ல விசேஷம்' திரைபடம் வெளியாவதால், குறைந்த அளவே திரையரங்குகள் கிடைக்கும் என்ற நிலையில், 'யானை' படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
With all due respect to #Vikram we are postponing our #Yaanai worldwide release to July 1st
— Drumsticks Productions (@DrumsticksProd) June 13, 2022
Wishing @ikamalhaasan sir @Dir_Lokesh and @RKFI for the record breaking success - Team Yaanai.#YaanaiFromJuly1st@arunvijayno1 #DirectorHari @priya_Bshankar @gvprakash @ZeeTamil pic.twitter.com/87vyF5KuDo
Sign up to receive our newsletter in your inbox every day!