Published : 09 Jun 2022 10:22 PM
Last Updated : 09 Jun 2022 10:22 PM

‘தங்கத்துக்கு திருமணம்’ - மருமகள் நயன்தாராவை தமிழகம் கொண்டாடுவதன் பின்புலம் என்ன?

இந்திய சினிமாவின் முன்னணி நடிகையர்களில் ஒருவரான நடிகை நயன்தாரா தனது காதலரும், இயக்குநருமான விக்னேஷ் சிவனை மணந்தார். தமிழகத்தின் மருமகளான அவரை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்திக் கொண்டாடிவருகின்றனர்.

வழக்கமாக திருமண நாளன்று பிறந்து வீட்டில் இருந்து புகுந்த வீட்டிற்கு வரும் மணமகளுக்கு ஆரத்தி எடுத்து அழகு பார்ப்பார்கள். நடிகை நயன்தாராவுக்கு ரசிகர்கள் ஏராளம். அதனால், அவரது திருமணமான இன்று வாட்ஸ்அப், ஃபேஸ்புக், ட்விட்டர் என சகல சமூக வலைதளங்களிலும் பல்லாயிரக் கணக்கிலான போஸ்ட்களையும், ஸ்டேட்டஸ்களையும் பதிவு செய்துள்ளனர். இந்தப் பதிவுகள் அனைத்தும் நயன்தாரா மீதான தமிழ் ரசிகர்கள் கொண்டிருக்கும் பெருமதிப்பையே காட்டுகின்றன.

கேரளத்தில் பிறந்து தென்னிந்திய சினிமாவில் ஒரு ரவுண்டு வந்தவர் நயன்தாரா. இடையில் சரிந்த மார்க்கெட்டை தன் நடிப்பின் மூலம் கம்பேக் கொடுத்து சரிசெய்தவர். நயன்தாராவின் பல முயற்சிகளை அவரது வாழ்வின் இந்த இனிய தருணத்தில் ரசிகர்கள் போற்றி வருகின்றனர்.

இந்த அழகிய வேளையில் அவர் குறித்து சங்கீதா வேல்முருகன் என்பவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இங்கே கவனிக்கத்தக்கது. அந்தப் பதிவு அப்படியே இங்கே:

"ஒரு நூறு பொம்பளைங்க இருக்குற ஆபீஸ்லயோ... இல்ல அபார்ட்மென்ட்லயோ ஒரு நாலு பொண்ணுங்க மட்டும் நல்லா அழகா, பாக்க பளிச்சுனு ட்ரெஸ் பண்ணி, கொஞ்சம் தனித்தன்மையோட யோசிச்சு அறிவா பேசினாலே, அவங்களை பத்தி spicy gossips பேசி character assassinate பண்ணி அடிச்சு காலி பண்ணி உக்கார வைக்கிற சமுதாயத்தில 4 மொழிகள்ல நல்லா அறிமுகமான ஒரு நடிகையா இருந்த சமயத்தில, பொது ஊடகங்களுக்கும், ரசிகர்களுக்கும் தெரிஞ்சு ரெண்டு காதல் தோல்வி., உறுதி செய்யப்படாத பல பல கிசுகிசுக்கள், நடிச்ச முதல் படத்தில இருந்தே body shaming-ன்னு பல அவமானங்களை சந்திச்ச மிக கரடுமுரடானா 19 ஆண்டுகள் கிராஃப் நயன்தாரவுடையது.

பட்ட அத்தனை அவமானங்களுக்கு பிறகு, யாராக இருந்தாலும் அழிந்து போயிருக்க கூடும்., ஆனால் அதன் பிறகு நயன் அசராமல் நின்று ஆடிய செகண்ட் இன்னிங்ஸ் அட்டகாசமானது!!

ஒரே வருடத்தில் தென்னிந்திய மொழிகள் 4-லும் பிளாக்பஸ்டர் வெற்றிகள்!! அத்தனை உச்ச ஹீரோக்களுடனும் படங்கள்!!

மாயா, அறம், புதிய நியமம், கோலமாவு கோகிலா, இமைக்கா நொடிகள், ஐரா, கொலையுதிர் காலம், நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன், நிழல் என அடுத்தடுத்து Female Centric படங்கள்! இளம் இயக்குனர்கள் எல்லாம் நயனுக்காக யோசித்து கதை எழுதும் அளவுக்கு ஒரு தனிப்பெரும் நாயகியாக, லேடி சூப்பர் ஸ்டாராக அவருடையது அசுர வளர்ச்சி!!

she came!! she conquered!! she ruled!!

காதலில் இருப்பதை சொன்னால், வாய்ப்பில்லாமல் போய்விடுமோ என பயந்து ஒளிந்து காதல் செய்த ஹீரோயின்களுக்கு மத்தியில், தன் காதலனுடன் லிவிங் டுகெதரில் இருந்து கொண்டே, கரியரில் உயரம் தொட்டு சாதித்து காட்டிய திறமையாளர் நயன்!! தன் பர்சனல் வேறு, பணி வேறு, என நிரூபித்து காட்டியவர்!!

Public Display of Affection (PDA) என்று சொல்வார்கள்.. தான் அன்பு செய்யும் ஒருவரை பொது வெளியில், பிறர் பற்றிய கவலை துளியும் இல்லாமல் கொண்டாடி தீர்க்கும் இயல்பு!! விக்னேஷ் சிவன் அதில் Expert!! And she deserved to be celebrated in that way!!

தன்னைக் கொண்டாடும் ஒருவனுடன் தங்கத்துக்கு இன்று திருமணம்!! மகிழ்ந்து வாழட்டும்!! வன்மங்கள் தொலைத்து வாழ்த்துவோம்" என நிறைவு செய்துள்ளார்.

விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியர் வாழ்வாங்கு வாழ வாழ்த்துவோம்.

வீடியோ வடிவில் இங்கே...

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x