Published : 09 May 2016 09:24 AM
Last Updated : 09 May 2016 09:24 AM

ஓட்டு போட வேண்டியது உன் கடமை: வாக்களிக்க வலியுறுத்தி சிம்பு எழுதிய பாடல்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடிகர் சிம்பு, பாடல் ஒன்றை எழுதி தயார் செய்து வருகிறார்.

சிம்பு எழுதியுள்ள பாடலில் இருந்து சில வரிகள்:

ஓட்டு போட வேண்டியது உன் கடமை
போடலைன்னா அது உன் மடமை
எதுக்குடா போடணும்னு நினைக்கிறது கொடுமை
அதனாலத் தான் நம்ம நாட்டுல இவ்வளவு வறுமை
நான் ஒருத்தன் போடலைன்னா என்னனு நீ நினைப்ப
உனக்கு வேண்டிய மாற்றத்தை நீயே தான் தடுப்ப
எவன் ஜெயிச்சா எனக்கு என்னனு நீ இருப்ப
தமிழ்நாட்டோட வளர்ச்சியை நீயே தான் கெடுப்ப
போடாம விட்டது பலவாட்டி
போட்டுத்தான் பாருடா இந்த வாட்டி
போடுங்கடா ஓட்டு இல்லாட்டி வேட்டு
போடுங்கடா ஓட்டு அதுக்குத்தான் இந்த பாட்டு

இப்பாடல் குறித்து ‘தி இந்து’விடம் சிம்பு கூறியதாவது:

அப்பாவைப் போல எதுகை மோனையுடன் எழுத வேண்டும் என்பது என் நீண்டநாள் ஆசை. அது இப்பாடல் மூலம் நிறைவேறி இருக்கிறது. தமிழக மக்கள் அனைவரும் ஓட்டு போட வேண்டும். அதற்கு நம்மால் ஆனதை செய்யவேண்டும் என நினைத்தேன். ஒரு வீடியோவில் அனைவரும் ஓட்டுப் போடுங்கள் என்று சும்மா சொல்ல முடியாது. பீப் பாடலை நான் வெளியிடவில்லை. அப்பிரச்சினையின்போது நீங்கள் ஒரு பாடலை வெளியிட்டால் தமிழ்நாடே கேட்கும் என்று சொன்னார்கள்.

தமிழ்நாடே கேட்கிறது என்றால் நாம் ஏன் ஓட்டுப் போடச் சொல்லி ஒரு பாடலை வெளியிடக் கூடாது என்று நினைத்து இதைச் செய்கிறேன். இன்னும் ஓரிரு நாட்களில் இப்பாடல் வெளியாகும். இந்த தேர்தல் மட்டுமன்றி அனைத்து தேர்தல்களுக்கும் இப்பாடல் பொருந்தும்.

இவ்வாறு சிம்பு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x