Published : 02 Jun 2022 03:34 PM
Last Updated : 02 Jun 2022 03:34 PM

புகழஞ்சலி | கேகே தனது பாடல்களின் வழியே உயிர் வாழ்வார் - முதல்வர் ஸ்டாலின்

'பாடகர் கேகே தனது பாடல்களின் வழியே வாழ்ந்துகொண்டிருப்பார்' என கேகே மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், ''பல்துறை பாடகர் கே.கேவின் அகால மரணம் குறித்த செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். வசீகரமான, புதுமையான, மகிழ்ச்சியான ஒரு ஆத்மார்த்தமான குரலை வாய்க்கப்பெற்ற கே.கே, தனது பாடல்களின் தொகுப்பின் மூலம் அனைத்து மொழி ரசிகர்களின் இதயங்களை வென்றார். அவரது பாடல்களின் வழியே அவர் எப்போதும் வாழ்ந்துகொண்டிருப்பார்'' எனத் தெரிவித்துள்ளார்.

பிரபல பின்னணி பாடகரான கேகே என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் செவ்வாய் இரவு கொல்கத்தாவில் நடைபெற்ற கல்லூரி கலாச்சார விழா ஒன்றில் பங்கேற்றார். அப்போது அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. தொடர்ந்து தான் தங்கியிருந்த விடுதிக்கு திரும்பினார். அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்த காரணத்தால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. அவரது திடீர் மறைவுக்கு காரணம் மாரடைப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x