தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடித்த ‘அரபி’ திரைப்பட டீசர் இன்று வெளியீடு
பெங்களூரு: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பயிற்சியாளர் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘அரபி’ என்னும் கன்னட மொழித் திரைப்படத்தின் டீஸர் இன்று மாலை வெளியாகிறது.
பாரா ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டிகலில் பல பதக்கங்களை வென்று அனைவரின் பார்வையையும் தன் பக்கம் ஈர்த்தவர் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த கே.எஸ்.விஸ்வாஸ். இவர் சிறுவயதில் தனக்கு ஏற்பட்ட விபத்தின் காரணமாக தனது கைகளை இழந்தார். எனினும் மனம் தளராது, கல்லூரிப் படிப்பை முடிந்து நீச்சல், குங்ஃபூ போன்றவற்றில் பயிற்சி பெற்று சர்வதேச அளவில் போட்டிகளில் பங்கெடுத்து பல சாதனைகளை புரிந்து வருகிறார்.
இந்த நிலையில், கே.எஸ்.விஸ்வாஸால் ஈர்க்கப்பட்ட இயக்குநர் ராஜ்குமார், விஸ்வாஸின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ‘அரபி’ (‘Arabbie’) என்ற படத்தை இயக்கியுள்ளார். ஸ்ரீவிஜய ராகவேந்திரா நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, விஸ்வாஸின் பயிற்சியாளராக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
இப்படத்தின் டீசர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகிறது.
