குல தெய்வ கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய நயன்தாரா, விக்னேஷ் சிவன்

குல தெய்வ கோயிலில் பொங்கல் வைத்து வழிபாடு நடத்திய நயன்தாரா, விக்னேஷ் சிவன்
Updated on
1 min read

கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தனது குலத்தெய்வ கோவிலில் இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா உடன் வந்து பொங்கல் வைத்து திங்கள்கிழமை வழிபாடு நடத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம் மேல வழுத்தூர் கிராமத்தில், ஆற்றங்கரையில் ஸ்ரீகாஞ்சி காமாட்சியம்மன் உள்ளது. இக்கோயில் தமிழ் திரைப்பட இயக்குநர் விக்னேஷ் சிவனின் குலத்தெய்வ கோயிலாகும். விக்னேஷ் சிவனின் திருமணம் விரைவில் நடக்க உள்ளதாக சொல்லப்படும் நிலையில், அவரும் நடிகை நயன்தாரவும் இன்று மதியம் இக்கோயிலுக்கு வந்தனர். பின்னர், நயன்தாரா கோயில் பிரகாரத்தில், பொங்கல் வைத்தார்.

தொடர்ந்து அம்மனுக்கு விசேஷ அபிஷேகம் நடந்தது. கருவறையிலிருந்த காமாட்சியம்மன், குப்பாயி, மகமாயி உள்ளிட்ட தெய்வங்களை நயன்தாராவும், விக்னேஷ் சிவன் இருவரும் வழிபட்டனர். சுமார் 2 மணி நேரம் கோயிலில் இருந்த இருவரும் கிராம மக்களுடன் பேசிக்கொண்டிருந்தனர். நயன்தாரா கோயிலுக்கு வந்திருப்பது அறிந்து கிராம மக்கள், இளைஞர்கள் கூட்டம் அதிகமிருந்தது. ரசிகர்கள் நடிகை நயன்தாராவுடன் போட்டோ எடுத்துக் கொள்ள அதிக ஆர்வம் காட்டினர். நடிகை நயன்தாராவை, விக்னேஷ் சிவன் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதில் கவனம் செலுத்தினார்.

பின்னர், அங்கிருந்து கும்பகோணம் ஆதி கும்பேஸ்வரர் கோயிலுக்கு சென்ற விக்னேஷ் சிவனும், நயன்தாராவும், ஆதிகும்பேஸ்வரர், மங்களாம்பிகை சன்னதியில் தரிசனம் செய்தனர். கோயிலுக்கு வந்த விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவுக்கு கோயிலில் சிறப்பான வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர், கோயில் யானைக்கு வாழைப்பழம் வழங்கி ஆசிர்வாதம் பெற்றனர். அரைமணி நேரத்திக்கு பிறகு புறப்பட்டு சென்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in