Published : 23 May 2022 10:16 PM
Last Updated : 23 May 2022 10:16 PM

தனுஷின் 'தி கிரே மேன்' ட்ரெய்லர் செவ்வாய்க்கிழமை வெளியீடு

ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ இயக்கத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கும் 'தி கிரே மேன்' படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் என நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ரூ.1500 கோடி பொருட் செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் 'தி கிரே மேன்'. 'அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்', 'எண்ட்கேம்', 'கேப்டன் அமெரிக்கா வின்டர் சோல்ஜர்', 'சிவில் வார்' போன்ற படங்களை இயக்கிய ஆண்டனி ரூசோ, ஜோ ரூசோ ஆகிய சகோதர்கள் இந்த படத்தை இயக்கியுள்ளனர். இந்த படத்தில் ரையான் காஸ்லிங், கிறிஸ் இவான்ஸ், அனா டி அர்மாஸ், ஜெசிக்கா ஹென்விக் ஆகிய பிரபலங்களுடன் இணைந்து நடிகர் தனுஷ் நடித்துள்ளார்.

இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு அமெரிக்காவில் நடைபெற்றது. அதற்காக நடிகர் தனுஷ் சுமார் மூன்று மாத காலம் அமெரிக்காவில் தங்கியிருந்து படப்பிடிப்பை முடித்துக் கொடுத்தார். அந்தப் படத்திற்கான இறுதிகட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியிடப்படும் என நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. தனுஷ் தனது போஸ்டருடன் கூடிய அறிவிப்பை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஜூலை 22-ம் தேதி வெளியாக உள்ளது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x