Published : 23 May 2022 02:25 AM
Last Updated : 23 May 2022 02:25 AM

'ஹாய் செல்லங்களா' - நடிகர் விஜய் உடன் இருக்கும் படத்தை பகிர்ந்த பிரகாஷ் ராஜ்

சென்னை: நடிகர் விஜய் உடன் தான் இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகர் பிரகாஷ் ராஜ். அதில் 'தளபதி 66' படத்தில் தாங்கள் இருவரும் இணைந்துள்ளது குறித்தும் தெரிவித்துள்ளார் அவர்.

தமிழ் திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவரை ரசிகர்கள் தளபதி என அழைப்பது வழக்கம். தற்போது இன்னும் பெயரிடப்படாத படத்தில் விஜய் நடித்து வருகிறார். இது அவரது 66-வது படம் என்பதால் தளபதி 66 என அறியப்படுகிறது. இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு பணிகள் ஹைதராபாத் நகரில் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தை இயக்குநர் வம்சி இயக்கி வருகிறார். ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் இந்தப் படம் உருவாகி வருகிறது.

ராஷ்மிகா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஷாம், யோகி பாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர். இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். இந்நிலையில், விஜய் உடன் தான் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார் பிரகாஷ் ராஜ்.

'ஹாய் செல்லங்களா! நாங்கள் இருவரும் தளபதி 66-இல் இணைத்துள்ளோம்' என கேப்ஷன் கொடுத்துள்ளார் பிரகாஷ் ராஜ். இந்த படம் தற்போது அதிகளவில் ரசிகர்களின் கவனத்தை பெற்று வருகிறது. கில்லி, ஆதி, சிவகாசி, போக்கிரி மற்றும் வில்லு ஆகிய படங்களில் இருவரும் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகளுக்கு பிறகு இருவரும் இணைந்து நடிப்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x