Last Updated : 18 May, 2016 04:44 PM

 

Published : 18 May 2016 04:44 PM
Last Updated : 18 May 2016 04:44 PM

ஆர்யா - ராகவன் இணையும் கடம்பன்

'மஞ்சப்பை' ராகவன் இயக்கத்தில் ஆர்யா நடித்து வரும் படத்துக்கு 'கடம்பன்' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

'பெங்களூர் நாட்கள்' படத்துக்குப் பிறகு, ராகவ் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார் ஆர்யா. கத்ரீன் தெரசா நாயகியாக நடித்து வரும் இப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இப்படத்திற்காக முன்பு எப்போதும் இல்லாத வகையில் தனது உடலமைப்பை மாற்றியிருக்கிறார் ஆர்யா. பழங்குடியினர் வேடத்தில் ஆர்யா நடித்துவரும் இப்படத்துக்கு 'தனிக்காட்டுராஜா' என பெயரிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகின. இத்தலைப்பிற்கு படக்குழு மறுப்பு தெரிவித்தது.

இப்படத்துக்கு 'கடம்பன்' என்று தலைப்பிட்டு இருப்பதாக படக்குழு சார்பில் தெரிவித்தார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளராக பணியாற்றி வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x