Published : 19 May 2022 06:11 PM
Last Updated : 19 May 2022 06:11 PM

ஜூன் 24-ல் வெளியாகிறது பார்த்திபனின் ‘இரவின் நிழல்’

பார்த்திபனின் 'இரவின் நிழல்' படம் ஜூன் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்திற்கு பின்னர் பார்த்திபன் 'இரவின் நிழல்' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'ஒத்த செருப்பு' படத்தில் ஒரே ஒரு கதாபாத்திரம் மட்டுமே இடம் பெற்றிருந்தைப் போல 'இரவின் நிழல்' படம் நான் லீனியர் 'சிங்கிள் ஷாட்'டில் எடுக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்ட 96 நிமிடங்கள் ஒரே ஷாட்டில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது.

நான் லீனியர் திரைக்கதை முறையில் சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்பட்ட உலகின் முதல் படம் என்ற பெருமையை பெற்றுள்ளது. வரலக்‌ஷ்மி சரத்குமார், ரோபோ ஷங்கர் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தை 'அகிரா புரொடக்‌ஷன்ஸ்' தயாரித்துள்ளது. ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் ஜூன் 24 ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x