Published : 19 May 2022 01:07 PM
Last Updated : 19 May 2022 01:07 PM

ரஷ்யாவில் 297 திரையரங்குகளில் கார்த்தியின் ‘கைதி’ இன்று ரிலீஸ்

ரஷ்யாவில் கார்த்தி நடித்த 'கைதி' திரைப்படம் இன்று ரஷ்யாவில் 297 திரையரங்குகளில் வெளியாகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த படம் 'கைதி'. கடந்த 2019-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்த இந்தப் படத்தில், நரேன், அர்ஜூன் தாஸ், பேபி மோனிகா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்தப் படம் இந்தியில் 'போலா' என்ற பெயரில் அஜய் தேவ்கன் நடிப்பில் உருவாகி வருகிறது. இந்தப் படத்தினை ட்ரீம் வாரியர் நிறுவனம், ரிலையன்ஸ் நிறுவனம், டி-சீரிஸ் நிறுவனம் மற்றும் அஜய் தேவ்கன் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கிறது.

இந்நிலையில், 'கைதி' படம் ரஷ்யாவில் இன்று வெளியாகிறது. 'உஸ்னிக்' என்ற பெயரில் சுமார் 121 நகரங்களில் 297 திரையரங்குகளில் படம் வெளியாகிறது. 'உஸ்னிக்' படத்தினை ரஷ்யாவில் 4 சீசன்ஸ் கிரியேஷன்ஸ் வெளியிடுகிறது.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x