Published : 17 May 2022 05:55 AM
Last Updated : 17 May 2022 05:55 AM

‘நெஞ்சுக்கு நீதி’ படக்குழுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பிரிவியூ தியேட்டரில் முதல்வர் ஸ்டாலினுடன் போனி கபூர், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட ‘நெஞ்சுக்கு நீதி’ படக் குழுவினர்.

சென்னை: உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘நெஞ்சுக்கு நீதி’ படத்தை பார்த்த முதல்வர் ஸ்டாலின், படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜீ ஸ்டுடியோஸ் சார்பில் போனி கபூர், ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் ராகுல் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நெஞ்சுக்கு நீதி’. அருண்ராஜா காமராஜ் இயக்கியுள்ளார். இந்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘ஆர்டிகிள் 15’ என்ற படத்தின் ரீமேக் இது. இதில் நாயகனாக உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ளார். ஆரி அர்ஜுனா, தான்யா ரவிச்சந்திரன், ஷிவானி ராஜசேகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் 20-ம் தேதி வெளியாக உள்ளது.

இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள பிரிவியூ தியேட்டரில் இப்படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்த்தார். பிறகு, படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின், இயக்குநர் அருண்ராஜா காமராஜ், தயாரிப்பாளர்கள் போனி கபூர், ராகுல் உள்ளிட்ட படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x