Published : 16 May 2022 09:49 AM
Last Updated : 16 May 2022 09:49 AM

16, மே, 1929-ல் முதல் ஆஸ்கர் விருது வழங்கப்பட்டது


திரைப்படத் துறையில் உலகின் மிக உயரிய விருதாகக் கருதப்படுவது ஆஸ்கர். அமெரிக்காவைச் சேர்ந்த அகாடமி ஆஃப் மோசன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் (Academy of Motion Picture Arts and Sciences) என்ற அமைப்பு வழங்கிவருகிறது. இந்த விருது வழங்கும் திட்டத்தை இந்த அகாடமியின் நிறுவனரான லூயிஸ் பி மேயர்தான் வடிவமைத்தார்.

ஜெனட் கெய்வனுக்கு விருது

சமீபத்தில் உலகப் புகழ் பெற்ற நடிகர் வில் ஸ்மித்துக்கு சிறந்த நடிகருக்கான ஆஸ்கர் விருது அளிக்கப்பட்டது. இது 94-வது ஆஸ்கர் விருது. சிறந்த நடிகர், நடிகை, இயக்குநர், படம், துணை நடிகை, துணை நடிகர், சொந்தத் திரைக்கதை, மாற்றியமைக்கப்பட்ட திரைக்கதை, அனிமேஷன் படம், வெளிநாட்டுப் படம், முழு நீள ஆவணப் படம், ஆவணக் குறும்படம், குறும்படம், அனிமேஷன் குறும்படம், பின்னணி இசை, பாடல், ஒலியமைப்பு, தயாரிப்பு வடிவமைப்பு, ஒளிப்பதிவு, ஒப்பனை, ஆடை வடிவமைப்பு, படத் தொகுப்பு, விஷூவல் எஃபெக்ட் ஆகிய 23 பிரிவுகளில் இன்று ஆஸ்கர் வழங்கப்படுகிறது.

விருதுடன் எமில் ஜானிங்ஸ்

ஆனால், முதலாம் ஆஸ்கர் விருது, சிறந்த படம், கலைப் படம், நடிகர், நடிகை, சொந்தத் திரைக்கதை, மாற்றியமைக்கப்பட்ட திரைக்கதை, இயக்குநர், நகைச்சுவைப் பட இயக்குநர், ஒளிப்பதிவு, எஞினியரிங் எஃபெக்ட்ஸ், தலைப்பு வடிவமைப்பு ஆகிய 12 பிரிவுகளில்தாம் வழங்கப்பட்டன. முதல் விருது விழா, லாஸ் ஏஞ்சல்ஸில் ஹாலிவுட் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் நடந்தது. இந்த விழா நடப்பதற்கு மூன்று மாதம் முன்பே விருது பெறயிருப்பவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுவிட்டன.

சிறந்த படமாக பாரமவுண்ட் ஃபேமஸ் லாஸ்கி, கலைப்படமாக சன்ரைஸ் - ஃபாக்ஸ், சிறந்த இயக்குநராக ஃபிராங்க் போர்சேஜ் (செவன்த் ஹெவன்), நகைச்சுவப் பட இயக்குநராக லூயிஸ் மைல்ஸ்டோன் (டூ அரபியன்ன் க்நைட்ஸ்), நடிகராக எமில் ஜானிங்ஸ் (த லாஸ்ட் கமாண்ட்), நடிகையாக ஜெனட் ஹெய்வன் (செவன்த் ஹெவன்) உள்ளிட்ட கலைஞர்கள் 12 பேருக்கு விருது வழங்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x