மேற்கு வங்கம் | வாடகை வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சின்னத்திரை நடிகை

மேற்கு வங்கம் | வாடகை வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சின்னத்திரை நடிகை
Updated on
1 min read

கொல்கத்தா: வாடகை வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார் பிரபல வங்காள மொழி சின்னத்திரை நடிகை பல்லவி டே (Pallavi Dey). இதனை போலீசார் தெரிவித்துள்ளனர்.

வங்காள மொழியில் பல்வேறு தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வந்தவர் பல்லவி டே. கொல்கத்தாவில் பிறந்து, வளர்ந்தவர். பல சீரியல்களில் நடித்து வந்த காரணத்தினால் அவர் மக்களிடையே மிகவும் பிரபலம் என தெரிகிறது. இந்நிலையில், ஞாயிறு ஆண்டு அவர் வசித்து வந்த வாடகை வீட்டில் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு குறித்த முதற்கட்ட விசாரணையில் அவர் தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை செய்து கொண்டது உறுதியாகி உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் அந்த வீட்டில் தனது ஆண் நண்பருடன் இணைந்து வசித்து வந்துள்ளார். அதனால் அந்த ஆண் நண்பரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இருந்தாலும் பல்லவியின் மரணத்தில் தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளனர் அவரது குடும்பத்தினர். சம்பவத்தின் போது பல்லவியின் ஆண் நண்பர் வெளியில் சென்றுள்ளார். அப்போது தான் பல்லவி தூக்கு மாட்டிக் கொண்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் உயிரிழந்த செய்தி அறிந்து சக நடிகர்கள் மற்றும் சின்னத்திரை கலைஞர்கள் என பலரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in