Published : 15 May 2022 07:51 PM
Last Updated : 15 May 2022 07:51 PM

'காடுன்னு ஒன்னு இருந்தா..' - மிரட்டும் 'விக்ரம்' படத்தின் ட்ரெய்லர் 

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் 'விக்ரம்' படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்திருக்கும் படம் 'விக்ரம்'. அனிருத் இசையமைத்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர். ஜூன் 3ஆம் தேதி இப்படம் வெளியாக இருக்கும் இப்படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியிடப்பட்டது. 'பத்தல பத்தல' என தொடங்கும் அந்த பாடலை கமலே பாடி, எழுதியும் இருந்தார். ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற இந்த பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் படத்தின் பாடல் மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் 'விக்ரம்' படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது.

விக்ரம் படத்தின் ட்ரெய்லர் :

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x