ஆக்‌ஷனில் கலக்கும் மகேஷ் பாபு: வெளியானது 'சர்காரு வாரி பாட்டா' ட்ரெய்லர்

ஆக்‌ஷனில் கலக்கும் மகேஷ் பாபு: வெளியானது 'சர்காரு வாரி பாட்டா' ட்ரெய்லர்
Updated on
1 min read

சென்னை: நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் உருவாகியுள்ள 'சர்காரு வாரி பாட்டா' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இதில் ஆக்‌ஷன் காட்சிகளில் அசத்துகிறார் அவர்.

டோலிவுட் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் மகேஷ் பாபு. இவரது நடிப்பில் உருவாகியுள்ள 'சர்காரு வாரி பாட்டா' திரைப்படம் வரும் 12-ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ், சமுத்திரக்கனி, வெண்ணிலா கிஷோர், நதியா ஆகியோர் நடித்துள்ளனர். கீதா கோவிந்தம் திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் பரசுராம் இப்படத்தை இயக்கியுள்ளார். தமன் இசை அமைத்துள்ளார். கடந்த ஜனவரியில் வெளியாக வேண்டிய இந்தத் திரைப்படம் கரோனா நெருக்கடி சூழலால் தள்ளிப்போனது.

சுமார் 02:36 நிமிடங்கள் டைம் டியூரேஷன் கொண்ட ட்ரெய்லரில் காதல், ஆக்‌ஷன், டேன்ஸ் என அசத்துகிறார் மகேஷ் பாபு. இந்தத் திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள 'கமான் கமான் காலாவதி' பாடல் யூடியூப் தளத்தில் 15 கோடி வியூஸ்களை கடந்துள்ளது. அந்தப் பாடலை சித் ஸ்ரீராம் பாடியுள்ளார்.

மகேஷ் பாபு நடிப்பில் கடந்த 2020-இல் கடைசியாக திரைப்படம் வெளியாகி இருந்தது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு அவரது படம் திரைக்கு வருவதை அவரின் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

ட்ரெய்லர் இதோ...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in