Last Updated : 15 May, 2016 03:16 PM

 

Published : 15 May 2016 03:16 PM
Last Updated : 15 May 2016 03:16 PM

ஜூன் 15 முதல் வடசென்னை படப்பிடிப்பு: படக்குழு தகவல்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'வடசென்னை' படத்தின் படப்பிடிப்பு ஜூன் 15-ம் தேதி முதல் துவங்கப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்க 'சூதாடி' என்ற படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. இடையே அப்படத்தின் படப்பிடிப்பை கைவிட்டு, தனுஷ் தயாரிப்பில் 'விசாரணை' படத்தை இயக்கினார் வெற்றிமாறன்.

'விசாரணை' படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் 'வடசென்னை' படத்தை இயக்கவிருப்பதாக வெற்றிமாறன் தெரிவித்தார். ஆனால், அப்படத்தின் படப்பிடிப்பு எப்போது என்பதில் குழப்பம் நீடித்து வந்தது.

'கொடி' படத்தை முடித்தவுடன் 'என்னை நோக்கி பாயும் தோட்டா' படத்தில் நடிக்கத் தொடங்கினார் தனுஷ். அதனைத் தொடர்ந்து ஹாலிவுட் படம், கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படம் என தொடர்ச்சியாக படங்களை தனுஷ் ஒப்புக் கொண்டிருப்பதால் 'வடசென்னை' நிலை என்ன என்பது குறித்து பல்வேறு செய்திகள் வெளியாகின.

2017-ம் ஆண்டில் தான் 'வடசென்னை' தொடங்கும் என தகவல் வெளியானது. இதற்கு படக்குழு மறுப்பு தெரிவித்திருக்கிறது.இது குறித்து "ஜூன் 15-ம் தேதி முதல் 'வடசென்னை' படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படவுள்ளது" என்று தெரிவித்திருக்கிறார்கள்.

இதன் மூலம் 'வடசென்னை' படம் குறித்து வெளியான குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது படக்குழு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x