Published : 19 Apr 2022 06:59 AM
Last Updated : 19 Apr 2022 06:59 AM

முதல் வார இறுதிக்குள் ரூ.550 கோடி வசூல்: உலக அளவில் சாதனை படைக்கும் கேஜிஎஃப் 2

முதல் வார இறுதிக்குள் ரூ.500 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ள 'கேஜிஎஃப் 2' திரைப்படம் உலகின் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

பிரசாந்த் நீலின் இயக்கத்தில் யஷ் நடிப்பில் கடந்த 13-ம் தேதி வெளியான பான் இந்தியா படம் 'கேஜிஎஃப் 2'. இதில், சஞ்சய் தத், ரவீனா டண்டன், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். படம் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

'கேஜிஎஃப் 2' படம் இந்திய அளவிலும், உலக அளவிலும் பாக்ஸ் ஆபிஸில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. படம் வெளியான முதல் நாளிலேயே ரூ.100 கோடி வசூல் செய்த இந்தப் படம், வெளியான நான்கு நாட்களில் உலக அளவில் 500 கோடி ரூபாய் வசூலைத் தாண்டி சாதனை படைத்து வருகிறது. இதன் மூலம், உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் வசூலில், 'ஃபென்டாஸ்டிக் பீஸ்ட்: தி சீக்ரெட் ஆஃப் டம்பிள்டோர்' படத்திற்கு அடுத்த படியாக இரண்டாவது இடத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவின் பாக்ஸ் ஆபீஸ் வசூலைப் பொறுத்த வரை, கடந்த இரண்டு நாட்களில் சிறிது டிராப்ஸ் இருந்தாலும், மூன்றாவது நாளில் அசாதாரண வசூலை எட்டியுள்ளது.
மும்பையில் படத்தின் வசூலில் சிறிது சறுக்கல் இருந்தாலும், குஜராத் மற்றும் ஒடிசாவில் பெரும் வசூலை எட்டியுள்ளது. இந்தியா முழுவதும் 6,500 திரையரங்குகளில் ஒடிக்கொண்டிருக்கும் 'கேஜிஎஃப் 2' படம் இந்தியில் மட்டும் 4,000 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் 'கேஜிஎஃப் 2' படம் சனிக்கிழமை 1 மில்லியனுக்கும் மேல் வசூல் செய்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x