Published : 18 Apr 2022 08:25 PM
Last Updated : 18 Apr 2022 08:25 PM

தென்னிந்திய சினிமாவே எனக்கு சுதந்திரம் அளிக்கின்றன - ஹன்சிகா

தென்னிந்திய சினிமாவே தனக்கு சுதந்திரம் அளிப்பதாகவும், அங்கு நல்ல கதாபாத்திரங்கள் கிடைப்பதாகவும் ஹன்சிகா மோத்வானி தெரிவித்துள்ளார்.

ஹன்சிகா மோத்வானி 'பிங்க் வில்லா' செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில், ''ஒரு ஸ்கிரிப்டை நான் தேர்ந்தெடுக்கும் முறை மிகவும் எளிமையானது. கதை கேட்கும்போது, நான் ஒரு நடிகையாக கதை கேட்க மாட்டேன். மாறாக, ஒரு பார்வையாராக இருந்து ஸ்கிரிப்டை கேட்பேன். கதை கேட்கும்போது, எனக்கு சலிப்பு ஏற்பட்டால் அந்தக் கதையை தேர்வு செய்ய மாட்டேன். ஒரு கதை என்னைக் கவர்ந்து என்னுள் பல கேள்விகளை எழுப்பினால், ஒரு பார்வையாளராக நான் அதை விரும்புவேன். எப்போதும் பரிசோதனை முயற்சியிலான படங்களில் நடிக்கவே ஆசைப்படுகிறேன். என் தோளில் சுமந்து செல்லும் வகையிலான படங்களில் நடிக்க வேண்டிய கட்டத்தில் தற்போது இருக்கிறேன். பார்வையாளர்களுக்கு எப்போதும் வித்தியாசமான படங்களை விருந்தாக்க வேண்டும்.

தென்னிந்திய சினிமா என்னை நல்ல முறையில் வரவேற்று, நான் விரும்பியதை செய்யும் சுதந்திரத்தை எனக்கு அளித்திருக்கிறது என நினைக்கிறேன். அங்கே பார்வையாளர்கள் எப்போதும் எனக்கு ஒரு தனி இடத்தை கொடுத்திருக்கிறார்கள்.நான் அங்கு ஒரே மாதிரியான கதாபாத்திரத்துக்குள் சுருங்கவில்லை. தெனிந்திய திரைப்படங்களில் எனக்கு பல்வேறு புதிய கதாபாத்திரங்கள் கிடைத்தன" என்றார்.

இந்தி திரையுலகில் இருந்து விலகி, அதிக தமிழ்ப் படங்களில் நடிப்பது உங்கள் மனப்பூர்வமான முடிவா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், ''எல்லா வகையான திரைப்படங்களிலும் நடிக்கவே நான் விரும்புவேன். குறிப்பாக தென்னிந்திய சினிமா ஸ்கிரிப்டகளில் நல்ல கன்டென்ட் கொண்ட ஸ்கிரிப்ட்கள் என்னை தேடிவருவதாக உணர்கிறேன். நீங்கள் கூறுவது போல அல்ல. நான் ஒரு என்டர்டெயினர். எங்கு, எந்த மொழியில் வாய்ப்பு கிடைத்தாலும் நான் என்டர்டெயின்ட் செய்வேன். என்னை சுற்றி ஒருபோதும் தடுப்பு வேலிகளை அமைத்துக்கொள்வதில்லை'' என்றார்.

ஹன்சிகா மோத்வானி தமிழ் மற்றும் தெலுங்கில் 'மை நேம் இஸ் ஸ்ருதி', 'பார்ட்னர்', 'ரவுடி பேபி', 'MY3' என்ற இணையத்தொடர் உட்பட 8 படங்களிலும் நடித்து வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x