அனிருத், சிம்பு ட்வீட் : ட்ரெண்டாகும் தமிழால் இணைவோம்

அனிருத், சிம்பு ட்வீட் : ட்ரெண்டாகும் தமிழால் இணைவோம்
Updated on
1 min read

சென்னை: அனிருத் மற்றும் சிம்பு ட்வீட்டை தொடர்ந்து "தமிழால் இணைவோம்" ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

டெல்லியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற நாடாளுமுன்ற அலுவல் மொழிக் குழு கூட்டத்தில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, "அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. இந்தி மொழியை உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல, ஆங்கிலத்திற்கு மாற்றாக ஏற்க வேண்டும். வெவ்வேறு மொழி பேசும் மாநில மக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ளும்போது ​​அது இந்தியாவின் மொழியில் இருக்க வேண்டும்" என்று பேசியிருந்தார்.

இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து இருந்தனர். இதற்கிடையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில், "இன்பத் தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு நேர்’ என்ற வரிகளுடன் கொண்டு ஒரு படத்தை பதிவு செய்து இருந்தார்.

மேலும், இது தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, தமிழ் தான் இணைப்பு மொழி என்று பதில் அளித்தார்.

இந்நிலையில் தற்போது நடிகர் சிம்பு மற்றும் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் "தமிழால் இணைவோம்" என்று தங்களது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்து உள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ட்விட்டர் வாசிகள் "தமிழால் இணைவோம்" என்பதை அதிக அளவு பதிவு செய்து வருகின்றனர். இதன் காரணமாக இது ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in