Published : 13 Jun 2014 09:15 AM
Last Updated : 13 Jun 2014 09:15 AM
உலகக் கோப்பை கால்பந்து போட்டியை பார்ப்பதற்காக கோவா மாநில அரசு செலவில் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட 6 பேர் பிரேசில் செல்ல இருக்கின்றனர்.
இது வீண் செலவு என்று வர்ணித்துள்ள மாநில எதிர்க் கட்சியான காங்கிரஸ், இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளது.
கோவாவில் இப்போது பாஜக ஆட்சியில் உள்ளது. 3 அமைச்சர்கள், 3 எம்எல்ஏக்கள் அடங்கி குழு ஒன்று ஜூலை 1-ம் தேதி அரசு செலவில் ஆய்வு சுற்றுலா என்று பெயரில் பிரேசிலுக்கு 10 நாள்கள் பயணம் மேற்கொள்ள இருக்கி றது. அங்கு நடைபெறும் உலகக் கோப்பை போட்டியை பார்க்கவே அரசியல்வாதிகள் அங்கு செல் கின்றனர். இதற்காக மாநில அரசு ரூ.89 லட்சத்தை ஒதுக்கி யுள்ளது.
இது தேவையற்ற செலவு என்றும் மாநில நிதியை ஆட்சி யாளர்கள் கொள்ளையடிக்கின் றனர் என்றும் காங்கிரஸ் குற்றம் சாட்டியுள்ளது.
இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக கோவா மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் துர்காதாஸ் காமத் கூறியுள்ளார்.
பிரேசில் செல்லும் குழுவில் விளையாட்டு வீரர்கள், கால்பந்து நிபுணர்கள் அல்லது விளையாட்டுத் துறை தொடர்பான அரசு அதிகாரி கள் இடம் பெற்றிந்தால் கூட அதனால் மாநிலத்தில் கால்பந்து வளர்ச்சிக்கு உதவும் செலவு என ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் இது முழுவதும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களின் இன்பச் சுற்றுலாவாக இருக்கிறது என்றும் காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.