சமந்தாவின் 'யசோதா' ஆக.12-ல் வெளியீடு

சமந்தாவின் 'யசோதா' ஆக.12-ல் வெளியீடு
Updated on
1 min read

நடிகை சமந்தா நடிப்பில் உருவாகி வரும் 'யசோதா' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்தப் படம் ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா அண்மையில் 'புஷ்பா' படத்தின் 'ஊ சொல்றியா மாமா' பாடல் மூலம் நாடு முழுவதும் மேலும் பிரபலமடைந்தார். மிகப்பெரிய அளவில் ஹிட்டான அந்தப் பாடல் மூலை முடுக்கெல்லாம் இன்றளவும் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

அதற்கு அடுத்தபடியாக ஹரிஹரிஷ் இயக்கத்தில் 'யசோதா' என்ற படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. ஸ்ரீதேவி மூவிஸ் சார்பில் சிவலெங்கா கிருஷ்ண பிரசாத் இந்தப் படத்தை தயாரிக்கிறார். வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன், ராவ் ரமேஷ், முரளி சர்மா உள்ளிட்ட பலர் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் சமந்தா எழுத்தாளராக நடித்துள்ளார். மேலும், த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் வரும் ஆகஸ்ட் 12ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in