Published : 06 Apr 2022 05:36 PM
Last Updated : 06 Apr 2022 05:36 PM

வெங்கட்பிரபு இயக்கத்தில் நாக சைதன்யா - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவுடன் கைகோத்திருக்கிறார் இயக்குநர் வெங்கட்பிரபு. இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

'மாநாடு' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளியான படம் 'மன்மத லீலை'. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படம் தற்போது திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தைத் தொடர்ந்து தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை வைத்து வெங்கட்பிரபு புதிய படம் ஒன்றை இயக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பை வெங்கட்பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்தப் படத்தை ஸ்ரீனிவாசா சில்வர் ஸ்க்ரீன் சார்பில் ஸ்ரீனிவாச சித்தூரி தயாரிக்கிறார். வெங்கட் பிரபுவுக்கு இது முதல் பை லிங்குவல் படம் என்பதும், நாக சைதன்யா நடிக்கும் முதல் தமிழ் படம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாகசைதன்யா நடிப்பில் 'பங்கார ராஜு' என்ற படம் இந்த ஆண்டு வெளிவந்தது. அடுத்ததாக, “Thank you” என்ற அவரது அடுத்த படம் ரிலீஸுக்கு காத்திருக்கும் வேளையில், இயக்குநர் வெங்கட் பிரபு உடன் இணைகிறார். அவரது 22-வது படம் இது. தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் பிரமாண்டமாக உருவாக உள்ளது. வெங்கட்பிரபு, நாக சைதன்யா பரஸ்பரம் தமிழ், தெலுங்கில் மொழிகளில் அறிமுகமாக உள்ள நிலையில், படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x