Published : 04 Apr 2022 06:03 PM
Last Updated : 04 Apr 2022 06:03 PM

ஆர்யா நடிக்கும் 'கேப்டன்' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

இயக்குநர் சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் 'கேப்டன்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படத்தின் வெளியீட்டு தேதியை அறிய ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

'அரண்மனை 3', 'எனிமி' படங்களுக்குப்பிறகு நடிகர் ஆர்யா 'கேப்டன்' படத்தில் நடித்துள்ளார். ஏற்கெனவே ஆர்யாவை வைத்து 'டெடி' படத்தை இயக்கிய சக்தி சௌந்தர்ராஜன் இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ஆர்யாவும் திங்க் ஸ்டுடியோஸும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், சிம்ரன், ’ஜகமே தந்திரம்’ ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, தியாகராஜன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர். யுவா ஒளிப்பதிவில் பிரதீப் ராகவ் படத்தொகுப்பு செய்ய டி.இமான் இசையமைத்துள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு 'கேப்டன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக பெற்று வருகின்றன. இந்நிலையில் 'கேப்டன்' திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை ஷேர் செய்துள்ள ஆர்யா, ''நீங்கள் ஓர் அற்புதமான எழுத்தாளர் - இயக்குநர் அண்ணா'' என்று சக்தி சௌந்தர்ராஜனை பாராட்டியுள்ளார். போஸ்டரில் துப்பாக்கியுடன் நிற்கும் ஆர்யாவுக்கு பின்னால் ராட்சத மிருகம் ஒன்று காட்சியளிக்கிறது. படத்தின் போஸ்டரை சமூக வலைதளங்களில் பகிரும் ரசிகர்கள், என்ன மாதிரியான கதை என்று தங்களாவே கணிக்கத் தொடங்கியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x