Published : 24 Mar 2022 09:34 PM
Last Updated : 24 Mar 2022 09:34 PM

விஜய் தேவரகொண்டா உடன் மீண்டும் இணைந்து பணியாற்றும் சமந்தா

விஜய் தேவரகொண்டா உடன் இரண்டாம் முறையாக சமந்தா இணைந்து பணியாற்ற உள்ளார்.

சமந்தா நடிப்பில் அடுத்து வெளியாக இருக்கும் திரைப்படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. 'புஷ்பா' ஒரு பாடலில் ஆடிய அவர், அடுத்தடுத்து நிறைய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். வருண் தவானுடன் இந்தியில் ஒரு படம், தெலுங்கில் 'சகுந்தலம்' மற்றும் 'யசோதா' என இரண்டு படங்கள் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.

அதேபோல் தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் ஒரு படத்திலும் நடித்து வருகிறார். அப்படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. தொடர்ந்து கார்த்தியின் படம் ஒன்றில் நடிக்கவும் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இப்போது விஜய் தேவரகொண்டா உடன் ஒரு படத்தில் சமந்தா இணையவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே இருவரும் 'மகாநடி' படத்தில் இணைந்து நடித்திருந்த நிலையில் மீண்டும், கூட்டணி சேரவுள்ளதாக சொல்லப்படுகிறது. இப்படத்தை சமந்தாவை 'மஜிலி' என்ற காதல் படத்தை இயக்கிய சிவா நிர்வானா இந்தப் படத்தையும் காதல் படமாக இயக்கவிருப்பதும், 'புஷ்பா' படத்தை தயாரித்த 'மைதிரி மூவி மேக்கர்ஸ்' தயாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்றும் அதிகாரபூர்வ அறிவிப்பு ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியாகலாம் என்றும் தெலுங்கு திரையுலக வட்டாரங்களில் பேசப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x