ரூ.200 கோடி பிளாக் பஸ்டர்... - 'வலிமை' வசூலை விவரம் தந்த போனி கபூர்

ரூ.200 கோடி பிளாக் பஸ்டர்... - 'வலிமை' வசூலை விவரம் தந்த போனி கபூர்
Updated on
1 min read

வலிமை படத்தின் வசூல் தொடர்பாக அதன் தயாரிப்பாளர் போனி கபூர் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், ஹியூமா குரோஷி, கார்த்திகேயா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘வலிமை’. ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் போனி கபூர் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படம் கலவையான விமர்சனங்களையும், நல்ல வசூலையும் பெற்றதாக கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து நாளை முதல் இந்தப் படம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

ZEE5 தளத்தில் வெளியாகவிருக்கும் படத்தினை புரோமோட் செய்யும் விதமாக தயாரிப்பாளர் போனி கபூர் ட்வீட் ஒன்றை பதிவு செய்தார். அதில், வலிமை ஈட்டிய வசூல் விவரங்களை பகிர்ந்திருந்தார். தனது பதிவில், "வலிமை 200+ கோடி வசூலை ஈட்டி பிளாக்பஸ்டர் ஹிட் ஆகியுள்ளது'' என்று தெரிவித்துள்ளார். மேலும், இந்தியிலும் நல்ல வசூலை ஈட்டியது என்றும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

கலவையான விமர்சனங்களால் 'வலிமை' படம் பெரிதாக வசூல் செய்யவில்லை என்ற தகவல்கள் ஒருபுறமும், மறுபுறம் 20 நாட்களிலேயே ரூ.200 கோடி வசூலை கடந்துவிட்டது என்றும் தகவல்கள் பரப்பப்பட்டு வந்தன. படத்தின் வசூல் குறித்த விவாதங்கள் அதிகமாகி வந்த நிலையில் போனி கபூர் அதிகாரபூர்வமாக இப்போது அதனை வெளிப்படுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in