Published : 14 Mar 2022 09:51 AM
Last Updated : 14 Mar 2022 09:51 AM

ஜூன் 3ல் விக்ரம் ரிலீஸ்: கமல்ஹாசன் அறிவிப்பு

மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள 'விக்ரம்' திரைப்படம் உலகம் முழுவதும் ஜூன் 3ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கமல்ஹாசன் தனது சமூக வலைதளப் பக்கங்களில், "நான் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்திருந்த "விக்ரம்" திரைப்படம் உலகின் சிறந்த திரை அரங்குகளில் ஜூன் 3ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது" என்று பதிவிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'விக்ரம்' படத்தில் கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ராஜ்கமல் நிறுவனம் மற்றும் டர்மரீக் மீடியா நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்து வருகின்றன. இந்தப் படத்தின் அறிமுக டீஸர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவற்றுக்குப் பெரும் வரவேற்பு கிடைத்தது.

காரைக்குடி, சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் இரண்டு கட்டங்களாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அதன் பிறகு ‘பிக் பாஸ் சீசன் 5’, கமலுக்கு கரோனா பாசிட்டிவ் ஆகிய காரணங்களால் தாமதமான இறுதிகட்ட படப்பிடிப்பு, சில வாரங்களுக்கு முன்னர் முடிந்தது.

படப்பிடிப்பு முடிந்ததை வீடியோ வெளியிட்டு அறிவித்தது படக்குழு. போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடந்து வந்த நிலையில், ‘விக்ரம்’ படத்தை தயாரித்து வரும் கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல், திரையரங்குகளில் இந்தப் படம் வெளியாகும் தேதியை, வரும் மார்ச் மாதம் 14-ம் தேதி, காலை 7 மணிக்கு அறிவிக்க இருப்பதாக அறிவித்தது.

மேலும், நடிப்பின் சிகரங்களான கமல், விஜய் சேதுபதி, பஹத் பாசில் என மூன்று நட்சத்திரங்களுடன், நட்சத்திர பட்டாளமே இணைந்து கடந்த 9 மாதங்களாக கடுமையாக பணியாற்றியுள்ளதால் பல சாதனைகளை படைக்கும் அனைத்து அம்சங்களும் விக்ரம் படத்தில் இருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருதது.

இந்நிலையில், கமல், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் நடிப்பில் உருவாகியுள்ள 'விக்ரம்' திரைப்படம் ஜூன் 3ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x