Last Updated : 25 Apr, 2016 05:09 PM

 

Published : 25 Apr 2016 05:09 PM
Last Updated : 25 Apr 2016 05:09 PM

க்‌ஷனம்’ ரீமேக் உரிமையை கைப்பற்றினார் சிபிராஜ்

தெலுங்கில் வரவேற்பைப் பெற்ற 'க்‌ஷனம்' (Kshanam) படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றி இருக்கிறார் சிபிராஜ்.

ரவிகாந்த் இயக்கத்தில் ஆத்வி சேஷ், ஆதா ஷர்மா, அனுஷ்யா பரத்வாஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'க்‌ஷனம்'. ஸ்ரீசரண் இசையமைத்த இப்படத்தை பி.வி.பி நிறுவனம் தயாரித்தது. பிப்ரவரி மாதம் வெளியான இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது.

வெளிநாட்டில் இருந்து வரும் நாயகன், தனது பழைய காதலியின் காணாமல் போன குழந்தையைத் தேடி புறப்படுவதே கதைக்களம். அவ்வாறு குழந்தையைத் தேடும்போது நிறைய திருப்பங்கள் இருப்பது போன்று திரைக்கதை அமைத்திருந்தார்கள். வழக்கமான த்ரில்லர் படங்களில் இருக்கும் திருப்பங்கள் போல் அல்லாமல் வித்தியாசமாக இருந்ததால் பெரும் வரவேற்பைப் பெற்றது.

இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையைக் கைப்பற்றி இருக்கிறார் சிபிராஜ். அவருடைய தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில், நாயகனாக சிபிராஜ் நடிக்கவிருக்கிறார். வேறு யாரெல்லாம் நடிக்கிறார்கள், யார் இயக்குநர் என்பது இன்னும் முடிவாகவில்லை.

ஜூலை மாதம் முதல் படப்பிடிப்பைத் தொடங்க திட்டமிட்டு இருக்கிறார்கள். அதற்குள் அனைத்தும் முடிவாகிவிடும் என்கிறார்கள் படக்குழுவினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x