Last Updated : 11 Apr, 2016 12:38 PM

 

Published : 11 Apr 2016 12:38 PM
Last Updated : 11 Apr 2016 12:38 PM

சிவகார்த்திகேயன் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் பகத் பாசில்

மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் படத்தில் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்க பகத் பாசில் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்.

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் 'ரெமோ' படத்தில் நாயகனாக நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்து வரும் இப்படத்தை 24AM ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. மேலும், இப்படத்தின் இசை மே மாத இறுதியில் வெளியிட படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.

'ரெமோ' படத்தைத் தொடர்ந்து 24AM ஸ்டுயோஸ் நிறுவனம் தயாரிக்கும் மற்றொரு படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார் சிவகார்த்திகேயன். மோகன் ராஜா இயக்க இருக்கிறார். இப்படத்தின் முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்பு நயன்தாரா நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருப்பதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது.

இந்நிலையில், தற்போது இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பகத் பாசில் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். இதில் அவருக்கு நெகட்டிவ் கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது. மலையாளத்தில் முன்னணி நாயகனாக வலம் வரும் பகத் பாசில் தமிழில் நடிக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் உடன் நடிக்க இருப்பவர்கள் தேர்வு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x