Published : 05 Mar 2022 01:04 PM
Last Updated : 05 Mar 2022 01:04 PM

வடிவேலு, ஃபகத், ரஹ்மான்... உதயநிதி - மாரி செல்வராஜின் ‘மாமன்னன்’ ஹைலைட்ஸ்!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்து வரும் படத்துக்கு ‘மாமன்னன்’ எனத் தலைப்பிட்டுள்ளது படக்குழு.

‘கர்ணன்’ படத்துக்குப் பிறகு துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமானார் மாரி செல்வராஜ். ஆனால், அதற்கு முன்னதாக உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை இயக்க முடிவு செய்து பணிகளைத் தொடங்கினார். இதனை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரிக்கத் திட்டமிட்டு பணிகள் தொடங்கப்பட்டன.

இதன் முதற்கட்டப் பணிகள் நீண்ட நாட்களாக நடைபெற்று வந்தன. மேலும், இதில் உதயநிதி ஸ்டாலினுடன் நடிக்கும் நடிகர்கள் தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. இதன் படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு நேற்று முதல் சேலத்தில் தொடங்கப்பட்டது.

‘மாமன்னன்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் உதயநிதி ஸ்டாலினுடன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர்.

இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர், இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். ‘மாமன்னன்’ பாடல்கள் அத்தனையும் யுகபாரதி எழுதவுள்ளார்.

ஒரே கட்டமாக ஒட்டுமொத்த படப்பிடிப்பையும் முடிக்கப் படக்குழு திட்டமிட்டுள்ளது. இதற்கு ஏற்றார் போன்று முதற்கட்டப் பணிகள் அனைத்தையும் திட்டமிட்டுப் படக்குழு முடித்து வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x