புதுச்சேரியில் 'வலிமை' படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்த தனியார் காப்பகக் குழந்தைகள்: அஜித் ரசிகர்கள் ஏற்பாடு

புதுச்சேரியில் 'வலிமை' படத்தின் சிறப்புக் காட்சியைப் பார்த்த தனியார் காப்பகக் குழந்தைகள்: அஜித் ரசிகர்கள் ஏற்பாடு
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரியில் தனியார் காப்பகத்தில் உள்ள 150 குழந்தைகள் வலிமை திரைப்படத்தின் சிறப்பு காட்சியை இன்று பார்த்தனர். அஜித் ரசிகர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

புதுச்சேரியில் அஜித் நடித்த வலிமை திரைப்படம் 15 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தனியார் ஹோமில் உள்ள 150 குழந்தைகளுக்கு நகரிலுள்ள திரையரங்கில் சிறப்பு காட்சிக்கு புதுச்சேரி பிரெஞ்சு சிட்டி அஜீத் ரசிகர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

இதற்காக காலையில் திரையரங்கத்துக்கு ஆர்வமுடன் குழந்தைகள் வந்து காலை சிறப்பு காட்சியை பார்த்தனர். இந்நிகழ்வை ஒருங்கிணைத்த அஜீத் ரசிகரான மோகன் கூறுகையில், "வலிமை படம் அறிமுக நிகழ்வை ஹோம் ஒன்றில் குழந்தைகளுக்கு முன்பாக நடத்தினோம். அப்போது அக்குழந்தைகள் திரையரங்கு சென்று படம் பார்க்க ஆசைப்பட்டனர். அவர்களுக்கு திரையரங்கம் செல்வது கனவாக இருந்தது.

எனவே அக்குழந்தைகளை திரையரங்கு அழைத்து வர திட்டமிட்டமிட்டோம். எங்கள் குழுவில் இருந்த ஐடியில் பணிபுரியும் தர்ஷா இதற்கான முழு செலவையும் ஏற்பதாக தெரிவித்தார். திரையரங்கிலும் பேசி மொத்தமாக டிக்கெட் எடுத்தோம். மொத்தம் ரூ. 18 ஆயிரம் செலவானது. அக்குழந்தைகளை படம் பார்க்க அழைத்து வந்து அவர்களின் சந்தோஷத்தில் பங்கேற்றோம்" என்று குறிப்பிட்டனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in