பிரபல பாடலாசிரியர் லலிதானந்த் மறைவு- திரையுலகினர் இரங்கல்

பிரபல பாடலாசிரியர் லலிதானந்த் மறைவு- திரையுலகினர் இரங்கல்
Updated on
1 min read

பிரபல திரைப்பட பாடலாசிரியர் லலிதானந்த் காலமானார். அவருக்கு வயது 47.

ஜெய் நடிப்பில் பிரேம்ஜி இசையமைத்த ‘அதே நேரம் அதே இடம்’ படம் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் லலிதானந்த். கோகுல் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ திரைப்படத்தில் ‘என் வீட்டுல நான் இருந்தேனே’ என்ற பாடலின் மூலம் பிரபலமானார்.

மேலும் ரௌத்திரம், ‘மாநகரம்’, ‘காஸ்மோரா’, ‘ஜூங்கா’, ‘திருமணம்’, ‘அன்பிற்கினியாள்’ உள்ளிட்ட படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள ‘கொரோனா குமார்’ படத்துக்கு பாடல்கள் எழுதியிருக்கிறார். மேலும் ‘லெமூரியாவில் இருந்த காதலி வீடு’, ‘ஒரு எலுமிச்சையின் வரலாறு’ ஆகிய இரு கவிதை தொகுப்புகளையும் வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த லலிதானந்த், நேற்று (பிப்.20) பிற்பகல் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், பாடலாசிரியர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in