Published : 14 Feb 2022 04:35 PM
Last Updated : 14 Feb 2022 04:35 PM

‘ராக்கெட்ரி’ படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு

மாதவனின் ‘ராக்கெட்ரி’ படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையப்படுத்தி மாதவன் எடுத்திருக்கும் படம் 'ராக்கெட்ரி'. மாதவனின் மனைவியாக சிம்ரன் நடித்துள்ளார். இவர்களுடன் ரஜித் கபூர், ரவி ராகவேந்திரா, மிஷா கோஷல், குல்ஷன் குரோவர், கார்த்திக் குமார் மற்றும் தினேஷ் பிரபாகர் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தில் நடிகர்கள் ஷாரூக்கான் மற்றும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர். சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி என 5 மொழிகளில் இப்படம் உருவாகியுள்ளது. கடந்த ஆண்டு வெளியான இப்படத்தின் ட்ரெய்லருக்குப் பெரும் வரவேற்பும் கிடைத்தது.

இப்படம் வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி வெளியாகும் என்று முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், பல்வேறு காரணங்களால் ‘ராக்கெட்ரி’ படம் தற்போது ஏப்ரல் வெளியீட்டிலிருந்து தள்ளிவைக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்படம் வரும் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x