Published : 12 Feb 2022 10:36 AM
Last Updated : 12 Feb 2022 10:36 AM

விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் படத்திற்கு ஒவைசி கட்சி எதிர்ப்பு: தெலங்கானாவில் திரையிட தடை செய்ய வலியுறுத்தல்

விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் படத்திற்கு ஒவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் படத்தைத் தெலுங்கானாவில் திரையிடக் கூடாது என நெருக்கடி கொடுத்து வருகிறது.

‘வெண்ணிலா கபடிக் குழு' படத்தின் மூலம் அறிமுகமானவர் விஷ்ணு விஷால். தொடர் வெற்றிகளின் நாயகனாகத் தன்னைத் தக்கவைத்துக் கொண்டுள்ள அவர், புதுமுக இயக்குநர்களைத் தொடர்ந்து ஆதரிப்பவர்.அவரது நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’, தமிழ், மலையாளம், தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளிலும் வசூல் சாதனை படைத்தது. தற்போது எஃப்.ஐ.ஆர் படத்தைத் தயாரித்து, நடித்திருக்கிறார். இந்தப் படம் நேற்று ரிலீஸ் ஆனது. ஆனால், தெலுங்கானாவில் படத்திற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.

அங்கு, விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர் படத்திற்கு ஓவைஸி கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலும் படத்தைத் தெலங்கானாவில் திரையிடக் கூடாது என நெருக்கடி கொடுத்து வருகிறது.

இது குறித்து அக்கட்சியின் எம்எல்ஏக்கள் சயீது அகமது பாஷா காத்ரி, ஜாஃபர் ஹுசைன் மீரஜ், கவுசர் மொஹிதீன் ஆகியோர் அமைச்சர் டி.ஸ்ரீநிவாச யாதவை சந்தித்து எஃப்.ஐ.ஆர் படத்தைத் திரையிட ஏன் எதிர்க்கிறோம் என்பது குறித்து மனு அளித்துள்ளனர். அந்தப் படத்தின் போஸ்டரில் ‘ஷதா (shahadah)’ என்ற வார்த்தை இடம்பெற்றுள்ளதாகவும் இது இஸ்லாம் இளைஞர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கும் முயற்சி என்று எதிர்ப்பு எழுந்துள்ளது.

மலேசியா, குவைத், கத்தாரிலும் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தை கவுதம் மேனனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த மனு ஆனந்த் இயக்கியுள்ளார். விஷ்ணு விஷாலுடன் ரெபேகா மோனிகா ஜான், கவுதம் வாசுதேவ் மேனன், மஞ்சிமா மோகன் ஆகியோர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x