’இயன்றவரை ஆதரிப்பீர்’ - ‘ஹ்ரிதயம்’ படத்தை பாராட்டிய மோகன்லால் வேண்டுகோள்

’இயன்றவரை ஆதரிப்பீர்’ - ‘ஹ்ரிதயம்’ படத்தை பாராட்டிய மோகன்லால் வேண்டுகோள்

Published on

வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ள ‘ஹ்ரிதயம்’ படத்துக்கு மோகன்லால் பாராட்டு தெரிவித்துள்ளார்.

வினீத் ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான படம் ‘ஹ்ரிதயம்’. இப்படத்தில் மோகன்லாலில் மகன் ப்ரணவ், கல்யாணி ப்ரியதர்ஷன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், இப்படத்தைப் பார்த்த மோகன்லால் படக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். இது குறித்து மோகன்லால் தான் கைப்பட எழுதிய கடிதத்தை தன் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அக்கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

ப்ரியதர்ஷன், ஸ்ரீனிவாசன் மற்றும் என்னுடைய குழந்தைகள் அனைவரும் இப்படத்தில் இதயபூர்வமாக இணைந்துள்ளனர். இப்படம் நம் இதயத்துக்கு நெருக்கமான ஒரு படமாக இருக்கும். இப்படம் உங்கள் அனைவருக்கு உற்சாகத்தை தரும் என்று நான் உறுதியாக கூறுகிறேன்.

சினிமாவைச் சேர்ந்த ஒருவனாக நீங்கள் அனைவரும் இந்தப் படத்தை திரையரங்கில் சென்று பார்க்க வேண்டும் என்று விரும்புகிறேன். சினிமா துறை இக்கட்டான சூழலில் இருக்கும் இந்தத் தருணத்தில் இயன்றவரை கலைஞர்களுக்கு ஆதரவு கொடுங்கள்.

இவ்வாறு மோகன்லால் கூறியுள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in